தப்பு பண்ணிட்டேன்.. ரன் அவுட்டுக்கு ருத்ராஜிடம் மன்னிப்பு கேட்டேன்.. அதுக்கு அவர் இப்படி ஒரு பதில் தந்தார்.. ஜெய்ஸ்வால் உருக்கமான பேட்டி.!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அபாரமாக விளையாட 235 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து இஷான் கிஷான் 32 பந்துகளில் 52 ரன்களும் ருத்ராஜ் 43 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர். இறுதியில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 191 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது. அந்த அணியின்மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 25 பந்துகளில் 45 ரன்களும் கேப்டன் மேத்யூ வேட் 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்றதற்குப் பின் பேசிய அவர் ” இது எனக்கு மிகவும் சிறப்பான ஒரு தருணம். நான் என்னுடைய இயல்பான விளையாட்டை விளையாடினேன். என்னுடைய ஷாட்கள் ஆட முயற்சித்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. என்னுடைய முடிவில் உறுதியாக இருந்தேன். கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் இருவரும் என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட ஊக்கப்படுத்தினர்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” என்னுடைய ஆட்டத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு போட்டிகளிலும் கற்றுக் கொண்டிருக்கிறேன். கடந்த போட்டியில் ருத்ராஜ் ரன் அவுட் ஆனது என்னுடைய தவறால் நடந்தது. இது தொடர்பாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதற்கு விளையாட்டில் இது போன்று நடப்பது சகஜம் தான் எனக் கூறினார். என்னுடைய தவறை ஏற்றுக் கொண்டேன். அவர் ஒரு சிறந்த மனிதர். என்னுடைய தவறை மறந்து என்னை அன்பாக பார்த்துக் கொண்டார்” என தெரிவித்தார்.

- Advertisement -

தன்னுடைய விளையாட்டு மற்றும் பிட்னஸ் பற்றி பேசிய அவர் ” என்னுடைய உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய அனைத்து ஷாட்களையும் பயிற்சிகளின் மூலம் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டில் மனவலிமை மிகவும் முக்கியம்.அதனை வலிமைப்படுத்தும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன் என்னுடைய பயிற்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்து ஈடுபட்டு வருகிறேன்” என தெரிவித்தார்.

இந்தியா முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது t20 போட்டி வருகின்ற செவ்வாய்க்கிழமை குவஹாத்தி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்றாம் தேதி நான்காவது போட்டி ராய்ப்பூரிலும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரிலும் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா அணியுடன் டி20 போட்டிகளுக்கு பிறகு இந்தியா தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles