எனக்கு நல்லா தெரியும் இப்படி நடக்கும்னு.. இஷான் கிட்ட இப்படி ஒரு விஷயத்தை சொல்லி அனுப்பினேன்.. கேப்டன் சூர்யா குமார் அதிரடி பேட்டி.!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்தியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அவ்வாறு வெற்றி பெற்று இருக்கிறது. பரபரப்பாக முடிமடைந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

20 ஓவர்களில் அந்த அணி 208 ரங்குக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்தியா 19.5 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து அவ்வாறு வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜூஸ் இங்கிலீஷ் 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணி தங்களது டி20 வரலாற்றில் அதிக ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. உலகக் கோப்பை தோல்வியில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ” இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இந்தப் போட்டியை மிகுந்த அடுத்தத்துடன் விளையாட வந்தோம். அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால் அனைத்து வீரர்களும் நல்ல முறையில் போட்டியின் அழுத்தங்களை சமாளித்தனர். இந்த அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா அணிக்காக விளையாடுவது வாழ்வின் மிகவும் சிறந்த ஒரு தருணம் அதுவும் இந்திய அணியை வழி நடத்துவது என் வாழ்க்கையில் சிறந்த தருணம். ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் பணிபுரிவு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இது சிறிய மைதானம் என்பதால் ரன்கள் சேர்ப்பது எளிதாக இருந்தது. இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 230-235 ரன்கள் குவிப்பது போல் இருந்தார்கள். எனினும் நமது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 210 க்குள் அவர்களை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி. போட்டிகளை ரசித்து விளையாட வேண்டும் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தி உரையாட வேண்டும் இதுதான் நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் இதுபோன்ற சூழ்நிலையில் பலமுறை இருந்திருக்கிறோம். என்ன நடக்கப் போகிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இஷான் கிஷான் இடம் களத்திற்கு சென்று உன்னுடைய கிரிக்கெட்டை ரசித்து விளையாடு என்று கூறினேன். நான் பேட்டிங் விளையாட செல்லும் போது என்னுடைய கேப்டன்சி பொறுப்பை ட்ரெஸ்ஸிங் குரூப்பில் விட்டு விட்டு சென்று விட்டேன். களத்திற்கு சென்று என்னுடைய ஆட்டத்தை ரசித்து விளையாடினேன்” என கூறினார்.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றி குறித்து தொடர்ந்து பேசுகையில் ” அதிகமான ரசிகர்கள் போட்டியை காண வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரசிகர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அணி அழுத்தத்தில் இருக்கும்போது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ரிங்கு சிங் ஆட்டோ மிகவும் அருமையாக இருந்தது. அவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் போட்டியை முடித்து வைத்தார். இதுபோன்ற சூழ்நிலைகள் அவருக்கு என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளில் இருந்து அணியை எவ்வாறு வெற்றி அழைத்துச் செல்வார் என்பதை ஐபிஎல் போட்டிகளிலும் பார்த்திருக்கிறோம். தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் அதை பார்க்கிறோம். நான் களத்தில் இருந்த போது பதற்றம் அடையாமல் இருங்கள் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று கூறி என்னை அமைதிப்படுத்தினார். முதல் 16 ஓவர்களுக்கு பிறகு நமது பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தியது மிகச் சிறப்பான ஒரு சாதனை” எனக் கூறி முடித்தார் சூரியகுமார்.

இந்தியா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து திருவனந்தபுரத்தில் விளையாட இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு இளம் வீரர்களை தயார் படுத்தும் விதமாக இந்தப் போட்டி தொடர் முழுவதும் இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles