நான் விராட் கோலி அல்ல.. சர்ச்சையாக பேசி போட்டி ஊதியத்தை அபராதமாக கட்ட முடியாதுப்பா.. எச்சரிக்கையான பும்ரா 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 387 ரன்ளை எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி சார்பாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை.

- Advertisement -

பும்ரா பேட்டி

ஆனாலும் இங்கிலாந்தில் அளிக்கப்படும் டியூக் பந்துகள் மிகவும் மோசமான தரத்துடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் கூட கடுமையாக விமர்சித்துள்ளார். இதன்பின் பும்ரா பேசும் போது, டியூக் பந்துகள் மிகவும் வேகமாக மாற்றம் அடைகிறது. அதனை என்னால் கட்டுப்படுத்த முடியாது. 

- Advertisement -

அதேபோல் பந்து சேதமடைவதை பேசி எனது ஊதியத்தை அபராதமாக கொடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் மிகவும் கடுமையாக உழைத்து அதிக ஓவர்களை வீசி வருகிறோம். எந்தவித சர்ச்சையான கருத்தையும் கூறி, எனது போட்டி ஊதியத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு என்ன மாதிரியான டியூக் பந்துகள் அளிக்கப்படுகிறதோ அதில் மட்டுமே வீசுகிறோம். அதனை ஒருபோதும் மாற்ற முடியாது.

- Advertisement -

என்ன மாற்றம்?

நடுவர்களுடன் சண்டை போட முடியாது. சில நேரங்களில் அந்த பந்து மோசமானதாக இருக்கும். அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. 2வது நாள் ஆட்டத்தை பொறுத்தவரை ஏராளமான டெக்னிக்கல் மாற்றங்களாஇ செய்தேன். பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக மாறியதால், எட்ஜ் சரியாக ஃபீல்டர்களின் கைகளுக்கு செல்லாது. அதனால் கொஞ்சம் கூடுதல் வேகத்துடன் வீச தொடங்கினேன். 

பெரிய மாற்றங்களை செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆஃப் ஸ்டம்பின் மேல் சரியாக பவுலிங் செய்ய வேண்டும். அந்த விதிக்கு ஒருபோதும் தளர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles