சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வை அறிவித்துவிட்டனர். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இனி அவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்கள். இதனால் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் எப்போது நடக்கிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் தேடி வருகின்றனர்.
கங்குலி பேட்டி
அந்த வகையில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி பேசும் போது, நாம் எல்லாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எல்லா வீரர்களை போலவே, கிரிக்கெட்டில் இருந்து அவர்களும் விலகி செல்வார்கள். கிரிக்கெட்டும் அவர்களிடம் இருந்து விலகி செல்லும். அது அவ்வளவு எளிதல்ல.. ஏனென்றால் ஒரு ஆண்டுக்கு 15 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும்.
2027 வரை விளையாடுவார்களா?
அவர்கள் இருவரும் குறைந்த போட்டிகளிலேயே கவனம் செலுத்துவார்கள். ரோகித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் அட்வைஸ் கொடுக்க தேவையில்லை. எனக்கு தெரிந்த அளவிற்கு அவர்களுக்கும் நன்றாகவே கிரிக்கெட்டை அறிவார்கள். அவர்களின் ஓய்வு முடிவை எப்போது எடுக்க வேண்டும் என்பது தெரியும். அதனை பற்றி எனக்கு கவலை இல்லை.
விராட் கோலி ஒரு கிளாசிக் வீரர். அவருக்கான இடத்தில் மாற்று வீரர்களை தேடுவதற்கு நிச்சயம் டைம் எடுக்கும். ஆனால் மீத விஷயங்களை அப்படியே விட்டுவிடுகிறேன். அவர் என்ன முடிவு எடுத்தாலும், எந்த ஆச்சரியமும் கிடையாது. ஆனால் 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவார்களா என்பதும் சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.

