நம்புவீங்களானு தெரியல.. ரிங்கு சிங் பார்த்தாலே எனக்கு அந்த வீரர் தான் ஞாபகம் வர்றாரு.. சூரியகுமார் யாதவ் வித்தியாசமான பேச்சு.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டி கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 235 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது.

- Advertisement -

அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்றைய போட்டியில் பனிப்பொழிவு இருந்த போதும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி அதிரடியான ஆஸ்திரேலியா அணியை இரண்டாவது பேட்டிங்கில் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றனர். மேலும் டி20 போட்டிகளின் வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா முதல் முதலாக டிஃபன்ட் செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இடம்பெறாத சூழ்நிலையில் இளம்பிரர்களை சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். மேலும் இளம் வீரர்கள் ஆன ஜெய்ஸ்வால், ருத்ராஜ், இஷான் கிஷான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சிலும் ரவி பிஸ்னாய், பிரதீஷ் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். வருகின்ற 2024 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிகளுக்கு முன்பாக இந்திய இளம் வீரர்களின் செயல்பாடு நம்பிக்கை அடிக்கும் விதமாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசிய சூரியகுமார் யாதவ்” அணியின் இளம்பிரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். என் மீது அதிக அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கூறுகின்றனர். அவர்களே பொறுப்புகளை எடுத்து செயல்படுவது அணியின் செயல்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கிறது. நேற்றைய போட்டி துவங்குவதற்கு முன் முதலில் பேட்டிங் செய்வதற்கு தயாராக இருங்கள் என்று கூறினேன். ஆடுகளத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த ஆடுகளத்தில் முதலில் இலக்கு நிர்ணயித்து அதனை கட்டுப்படுத்துவது பற்றி பின்னர் பேசினேன். ரிங்கு சிங் கடந்த போட்டியில் விளையாட வரும்போது அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சி மற்றும் களத்தில் அமைதியாக இருந்தது என்னை வியக்க வைத்தது. ஆட்டத்தின் பரபரப்பான சூழ்நிலையிலும் அவரது அமைதி எனக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரை ஞாபகப்படுத்தியது என தெரிவித்தார். பேட்டி எடுப்பவர் அந்த முன்னாள் வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் எல்லோருக்கும் அவர் யார் என்று தெரியும்” எனக் கூறி சிரித்தார்.

சூரியகுமார் யாதவ் நேற்றைய போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் பரபரப்பான சூழ்நிலையிலும் ரிங்கோசிங் பதற்றமில்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நினைவுபடுத்துவதாக தெரிவித்திருக்கிறார். நேரடியாக தோனியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் தளத்தில் அவர் இருக்கும் அமைதி மற்றும் பதற்றமில்லாமல் கூலாக இருப்பது தோனியை நினைவுபடுத்துவதாகத்தான் இருக்கிறது என ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணிக்காக இதுவரை 7 போட்டிகளில் ஆடி இருக்கும் ரிங்கு சிங் 128 ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இவரது சராசரி 128. மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 216.95. இந்திய டி20 அணிக்கு புதிய பினிஷர் ஆக தன்னை மெருகேற்றி வருகிறார் ரிங்கு சிங்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles