விராட் கோலியிடம் 2 கேள்விகளை கேட்டேன்.. ஓய்வு முடிவு பற்றி 2 வாரங்களுக்கு முன்பாகவே தெரியும்.. ரவி சாஸ்திரி அறிவுரை

இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் விராட் கோலி எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். 

- Advertisement -

இதனால் வரும் காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உடன் சில ஆலோசனைகளை விராட் கோலி மேற்கொண்டுள்ளார். ஏனென்றால் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவருடன் தொடர்ந்து பயணிப்பவர் ரவி சாஸ்திரி.

- Advertisement -

ரவி சாஸ்திரி பேட்டி

பயிற்சியாளராக அனில் கும்ப்ளே வந்தபோதும் கூட, மீண்டும் பிசிசிஐ நிர்வாகிகளுடன் சண்டையிட்டு விராட் கோலி ரவி சாஸ்திரியை அழைத்து வந்தார். இந்த நிலையில் விராட் கோலி உடனான ஆலோசனை பற்றி ரவி சாஸ்திரி பேசி இருக்கிறார். அதில் ரவி சாஸ்திரி சொல்லும் போது, ஓய்வு குறித்து விராட் கோலியுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான்.

- Advertisement -

அந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு வாரம் முன்பாக ஆலோசித்தேன். அவரின் மனது மிகவும் தெளிவாக இருந்தது. கிரிக்கெட்டுக்காக விராட் கோலி முடிந்த வரை அனைத்தையும் செய்திருக்கிறார். அவரிடம் எந்த ஏமாற்றமும் இருக்கவில்லை. என் தரப்பில் 2 கேள்விகளை மட்டுமே எழுப்பினேன். அதனை வெளியில் சொல்ல முடியாது. ஏனென்றால் எங்களுக்குள் பேசப்பட்ட விஷயம் அது.

விராட் கோலியின் உழைப்பு

அவரிடம் எந்தவொரு குழப்பமும் இல்லை. நேரமும் சரியாக இருந்தது. அதேபோல் அவரின் உடல்தான் மனதிற்குள் சொல்லியதாக நினைக்கிறேன். விராட் கோலி என்ன செய்தாலும் 100 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். அதனை யாராலும் எட்ட முடியாது. கிரிக்கெட்டில் ஒரு வீரர் தனது பணியை செய்துவிட்டால், கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பார். ஆனால் விராட் கோலி அப்படியல்ல. 

- Advertisement -

பவுலிங் செய்யவில்லை என்றால், ஃபீல்டிங்கில் அத்தனை கேட்ச்களையும் தானே பிடிக்க வேண்டும் என்று உழைப்பார். களத்தில் ஒவ்வொரு முடிவினையும் அவரே எடுக்க வேண்டும் என்று விரும்புவார். கடந்த 15 ஆண்டுகளில் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என்று அனைத்து இடங்களிலும் கொடி நாட்டி இருக்கிறார். அவரின் ஆட்டத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பை விதைத்துவிட்டார். ரசிகர்களுக்கு விராட் கோலியை பிடிக்கவில்லை என்றாலும், அவரின் ஆட்டத்தை பார்ப்பார்கள். அவரின் எனர்ஜி எளிதாக பரவக் கூடியது. உடன் விளையாடுவோர் மட்டுமல்லாமல், பார்க்கும் ரசிகர்களுக்கும் பரவும். விராட் கோலியின் இந்த முடிவு எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles