பெருமையா இருக்கு.. 222 அடிச்சும் தோற்க பவுலர்ஸ் காரணம் இல்ல.. இந்த ஒரு விஷயம் தான்.. கேப்டன் சூரியகுமார் விரக்தி பேச்சு.!

ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பைக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

- Advertisement -

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் சிறப்பாக விளையாடி 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஆஸ்திரேலியா.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அந்த அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் தனி ஒரு ஆளாக போராடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய அவர் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற காரணமாக இருந்தார்.

- Advertisement -

இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது கடைசி நான்கு பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் எடுத்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் அந்த அணி தொடர இழப்பதையும் தடுத்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தனது முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்திருக்கிறது. கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ” மேக்ஸ்வெல்லை விரைவாக அவுட் ஆக வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது. 220 ரன்கள் எடுத்திருந்தாலும் பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்தது. ஆஸ்திரேலியா அணி துவக்கம் முதலே சமமான போட்டியில் இருந்தது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” அணி வீரர்களிடம் மேக்ஸ்வெல் விரைவாக அவுட் ஆக வேண்டும் என்று கூறினேன். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. அக்சர் பட்டேல் அனுபவம் மிக்க வீரர். அதனால்தான் அவரிடம் 19வது ஓவரை வீச கொடுத்தேன். ஒரு சுழற் பந்து வீச்சாளராக பணிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது பந்து வீசுவது என்பது மிகவும் கடினம் தான். இருந்தாலும் அவரது அனுபவத்தை வைத்து அந்த பொறுப்பை அவரிடம் கொடுத்தேன். எப்படியாவது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவார் என நம்பினேன். எனினும் மேக்ஸ்வெல் நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற செய்து இருக்கிறார். இந்திய அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனது அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என தெரிவித்தார்.

முதல் மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான அதாவது டி20 போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை ராய்ப்பூரில் வைத்து நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் தேதி கடைசி டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு டி20 போட்டிகளுக்கும் ஆஸ்திரேலியா அணியிலும் இந்திய அணியிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles