தெரியாம கேட்கிறேன்.. அஸ்வினை ஏன் டீம்ல எடுக்கல.. அப்படி என்ன தப்பு பண்ணினார்.? சுனில் கவாஸ்கர் சரமாரி கேள்வி.!

இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் ஒன்பதாவது போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 272 ரன்களுக்கு ஏற்றி விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 35 ஓவர்களில் 273 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்திய அணியின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சார்துல் தாக்கூர் அணியில் இடம் பெற்றிருந்தார் . இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளர் வான சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய அணியின் நிர்வாகம் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு எதிராக சரா மாதிரியான கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் டாஸ் நிகழ்விற்குப் பிறகு இந்திய அணியின் ஆடும் லவ்வினை ரோகித் சர்மா அறிவித்தார். அதில் அஸ்வினுக்கு பதிலாக சார்துல் தாக்கூர் பெயர் இடம் பெற்று இருந்தது . இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய கவாஸ்கர் ” அஸ்வின் என்ன தவறு செய்தார் என்று தெரியவில்லை. அவரை ஏன் அணியில் இருந்து நீக்கினார்கள்.? மீண்டும் ஒருமுறை அஸ்வின் தீமிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இது அவருக்கு தொடர்கதையாக நடந்து வருகிறது. அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்குப் புரியவில்லை” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் முகமது சமி அணியில் இடம்பெறாதது பற்றி பேசிய கவாஸ்கர் ” கடந்த முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் முகமது சமி அவர் நிச்சயமாக அணியில் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அவருக்கான இடமும் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற அணியின் தேர்வுகள் சில நேரம் புரிவதில்லை” எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. அவரது அதிரடியான சதத்தால் 35 அவர்களிலேயே இந்தப் போட்டி முடிவடைந்தது. இதன் மூலம் இந்திய அணியின் நெட் ரன்ரேட் நல்ல அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்திய அணி அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அகமதாபாத்தில் வைத்து விளையாட இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் அணியினர் ஏற்கனவே அகமதாபாத் சென்றடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு போட்டிகளில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சுப்மன் கில் நேற்று அகமதாபாத் சென்றடைந்தார். அவர் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் கேட்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து உறுதியான செய்திகள் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பத்தாவது போட்டியில் முன்னாள் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி இன்று தென்னாப்பிரிக்காவை லக்னோவில் வைத்து எதிர்கொள்ள இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles