கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐபிஎல் ஏலத்தில் வந்தால் பெருந்தொகையை கொடுத்து வாங்கலாம் என ஒரு அணி எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது. ஆனால், அதற்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒப்புக்கொள்ளவில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்த நிலை. ஆண்ட்ரே ரஸ்ஸலை ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக 12 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.
கேகேஆர் மேன் என கருத்து:
இதனைக் குறித்து, பிரசன்னா தனது யூடியூப் சேனலில் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் ஒரு உரையாடலில், “ கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஆண்ட்ரே ரஸ்ஸலை வெளியேற்றினால், அவர் ஏலத்தில் பங்கேற்கும் போது ஒரு பெரும் தொகையை தரலாம் என உரிமையாளர் உறுதி அளித்துள்ளார்.
ஆனால், அவர் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் அந்த உரிமையாளர்களிடம், ‘கேகேஆர் மேன், கேகேஆர் மேன், கேகேஆர் மேன்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ரசல், 2014 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார், மேலும் அவர் பேட்ஸ்மேனாகவும் மற்றும் பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஒட்டுமொத்தமாக, அவர் 127 ஆட்டங்களில் விளையாடியுள்ளார், அதில் 120 இந்தியன் பிரீமியர் லீக் விளையாடி உள்ளார். ஆல்- ரவுண்டராக 174.92 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் சுமார் 2,500 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும், அவர் 114 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 2014 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளார்.

