தென்னாபிரிக்கா வீரர் ஹென்ரி கிளாசன் நடப்பு டி20 பேட்ஸ்மேன்களில் டாப் வீரராக திகழ்கிறார். வலிமையான கைகளால் அடிக்கும் சிக்ஸர்கள் என்ற பலத்தை வைத்து பல்வேறு தொடர்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் அவரால் டி20ஐ உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணியை வெற்றி எல்லைக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. அதனால் ஏற்பட்ட மனச்சோர்வு பற்றி அவர் விவரித்துள்ளார்.
இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான 2024 டி20ஐ உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கிளாசன் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினர் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். அக்ஷர் பட்டேல் ஓவரில் அவர் அடித்த அடியில் வெற்றி நிச்சயம் தென்னாபிரிக்கா பக்கம் தான் எனத் தெரிந்தது.
30 பந்துகளில் 30 ரன்கள் தேவையான போது அவர் ஆட்டமிழக்க பின்னர் பும்ரா மாஸ்டர்கிளாஸ் பந்துவீச்சை வெளிக்காட்ட இந்தியா கோப்பையைத் தட்டிச் சென்றது. பல ஆண்டுகள் கோப்பைக் கனவு நனவாக்க இதை விட எளிய வாய்ப்பு அமையாது. இந்தத் தோல்வி தென்னாபிரிக்கா அணி & ரசிகர்களுக்குப் மிகப் பெரிய ஏமாற்றம்.
இந்த ஆண்டு தென்னாபிரிக்கா டி20 லீகில் டர்பன் சூப்பர்ஜயன்ட்ஸ், ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சர்வதேச டி20 உலகக் கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்காக என மொத்தம் மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடி தோல்வியைச் சந்தித்துள்ளார் ஹென்ரி கிளாசன். அனைத்து தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தொடர் மூன்று பைனல் தோல்விகள் அவரை உழுக்கிவிட்டன.
இது பற்றி கிளாசன் கூறியதாவது, ” டி20ஐ உலகக் கோப்பை தோல்வி அடைந்த பிறகு மிகுந்த மன சோர்வில் இருந்தேன். அது முடிந்த ஐந்து நாட்களில் அமெரிக்கா கிரிக்கெட் லீகில் கேப்டனாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. மூன்று இறுதிப் போட்டிகளில் கண்ட தோல்வியால் என்னால் அங்கு சரியாக விளையாட முடியவில்லை. ” என்றார். அவர் அமெரிக்கா டி20 லீகில் 6 இன்னிங்சில் 97 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
மேலும், ” மிகுந்த மன சோர்வு தொடர்ந்ததால் கரீபியன் பிரீமியர் லீகில் என்னால் விளையாட வர முடியவில்லை என நிர்வாகத்திடம் கூறினேன். அவர்கள் எனது நிலைமையைப் புரிந்துக் கொண்டனர். ” என்றார் ஹென்ரி கிளாசன். கரீபியன் பிரீமியர் லீகில் கிளாசன் ஒப்பந்தமான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதல் முறையாகச் சாம்பியன் பட்டன் வென்றதற்கு அவர் வாழத்தும் தெரிவித்தார். அவர் அந்த வெற்றியை சுவைத்து இருந்தால் அனைத்து சோர்வும் பறந்துப் போய் இருக்கும், ஆனால் பாவம் விளையாடத் தெம்பில்லமால் வெளியேறினார்.

