அவர் கோபப்பட்டாலும் பிரச்சனை இல்ல.. ரோகித் தோனியில் எனக்கு புடிச்ச கேப்டன் இவர்தான்… சார்துல் தாக்கூர் பேட்டி

2025 ஆம் வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பிரம்மாண்டமான ஏலம் இந்த வருட இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அணியின் உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தையில் பெரும்பான்மையான அணி உரிமையாளர்கள் மெகா ஏலம் வேண்டாம் என தங்களது கருத்தை முன் வைத்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணியின் ஆல்ரவுண்டரான சார்துல் தாக்கூர் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த பிறகு இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வரும் சார்துல் தாக்கூர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சுற்று பயணத்தின் போதும் இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி அணிகளில் சார்துல்  தாக்கூர் இடம்பெற்றார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சார்துல்  தாக்கூர், ரோகித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி ஆகிய இருவரில் சிறந்த கேப்டன் யார்.? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் சார்துல்  தாக்கூரிடம், எம்.எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்கும் போது ரோஹித் சர்மா குறித்து சிறிய கிண்டலுடன் தனது சிறந்த கேப்டனை சார்துல் தாக்கூர் தேர்வு செய்தார். சார்துல் தாக்கூர் எம்.எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரிலும் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாடிய சார்துல்  தாக்கூர், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியிலும் விளையாடி இருக்கிறார். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் 5 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர். ஆனால் தோனி 3 ஐசிசி டிராபி ஜெயித்திருக்கிறார். தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார். இந்நிலையில் சார்துல் தாக்கூர் எம்.எஸ் தோனியை சிறந்த கேப்டனாக தேர்வு செய்தார்.

- Advertisement -

ரோகித் சர்மாவை ஏன் சிறந்த கேப்டனாக தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த சார்துல்  தாக்கூர், ரோஹித் சர்மா தனது நண்பர் என கிண்டலுடன் குறிப்பிட்டார். தான் எம்.எஸ் தோனியை தேர்வு செய்தது குறித்து ரோகித் சர்மா கோபப்பட்டாலும் அவரைப் பேசி சமாதானம் செய்து விட முடியும் என்றும் சார்துல்  தாக்கூர் தெரிவித்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ் தோனி இருவரும் வீரர்களாகவே விளையாடினர். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகித்து வந்த மகேந்திர சிங் தோனி இந்த வருட ஐபிஎல் தொடரில் தனது கேப்டன் பதவியை ருத்ராஜ் கெயிக்வாட்டிற்கு கொடுத்துவிட்டு வீரராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles