டி20 உலக கோப்பை.. இந்திய அணியில் விலகிய முக்கிய வீரர்.. கம்பீர் திட்டத்தில் அடி.. மாற்று வீரர் இவரா?

தற்போது டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து மிகவும் முக்கியமான ஒரு வீரர் காயத்தால் வெளியேறி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஹர்ஷித் ராணா காயம் அடைந்தார். எனவே அவர் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி பிறகு வெளியேறினார். தற்போது காயம் பெரியதாக இருப்பதால் அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவர் கடந்த டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்ஷித் ராணா வெளியேறி இருப்பது டி20 உலகக் கோப்பை பிளேயிங் லெவலுக்கான தங்கள் திட்டத்தில் பெரிய அடியாக அமைந்திருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஏமாற்றமாக கருத்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் நிலை இன்னும் தெரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles