இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ஹர்ஷித் ரானா நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். இவரது பேட்டிங் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவரது பேட்டிங் இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி அருகில் வர உதவியாக அமைந்தது.
ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் என பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்கள் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய உதவியாக இருந்து வருகிறது. இதனால் தோற்கும் அபாயம் இருக்கும் போட்டிகளில் எல்லாம் இவர்களது பேட்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய உதவியாக அமைகிறது. இந்த சூழ்நிலையில் அது போல தற்போது இந்திய அணிக்கு ஹர்ஷித் ராணா அமைந்து வருகிறார். அவரை பேட்டிங் தெரிந்த பலராக மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பெருமளவில் முயற்சிகள் செய்து வருகிறது.
என்ற சூழ்நிலையில் இதுகுறித்து அவர் கூறும் போது ” தோல்விகள் என்னை பெரிய அளவில் பாதித்தது கிடையாது. ஏனென்றால் இதற்கு முன்பு நான் கடந்த 10 ஆண்டுகள் பெரிதாக வெற்றிகள் எதையும் பார்த்தவன் இல்லை. இதனால் நான் தோல்வி அடையும் சமயங்களில் எனது தந்தையிடம் மனம் உடைந்து அழுது இருக்கிறேன். அந்த சமயத்தில் எல்லாம் அவர்தான் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். இப்போது இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்து நன்றாக விளையாடி வருகிறேன். நான் வலை பயிற்சியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு பந்து வீச விரும்புகிறேன். வலைப்பயிற்சியில் கூட அவர்கள் என்னை போட்டி தன்மையோடு எதிர்கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.

