நாடு திரும்பிய ஹர்சித் ராணா.. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரர்.. காரணம் என்ன?

இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2 இன்னிங்சிலும் 5 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசிய போதும், இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதன் மூலமாக இந்திய அணி தோல்வியின் மூலமாக புதிய வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

நாடு திரும்பிய ஹர்சித் ராணா

இந்த சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று பர்மிங்ஹாம் புறப்பட்டது. இந்திய அணியின் பேருந்தில் இளம் நட்சத்திர வீரரான ஹர்சித் ராணா காணப்படவில்லை. இதனால் ஹர்சித் ராணாவுக்கு என்ன ஆனது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்த நிலையில் ஹர்சித் ராணா இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசும் போது, இதுவரை தேர்வுக் குழு தலைவரிடம் பேசவில்லை. இதுதொடர்பாக அவரிடம் நிச்சயம் பேசுவேன். இங்கிலாந்து வந்த போது, ஒரு வீரர்களுக்கு சிறிய அளவில் காயம் இருந்தது. அதனால் ஹர்சித் ராணா பேக் அப் வீரராக இருந்தார். ஆனால் இப்போது அந்த வீரர் முழுமையான ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்.

- Advertisement -

அர்ஷ்தீப் அல்லது ஆகாஷ் தீப்

அதனால் ஹர்சித் ராணா இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று கூறி இருக்கிறார். இது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. இதனால் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. தற்போது அவர்கள் முழு ஃபிட்னஸை எட்டி இருக்கிறார்கள்.

இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு ஆகாஷ் தீப் அல்லது அர்ஷ்தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பழைய பந்தில் யார் சிறப்பாக பவுலிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles