புகை மட்டும் இல்லன.. வருண் பந்தில் அவுட்டே ஆகி இருக்க மாட்டேன்.. வேற மாதிரி இருந்திருக்கும் – இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பேட்டி

இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பெரிதாக சோபிக்கவில்லை. 20 ஓவர்கள் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 130 ரங்களுக்கு சுருண்டது, இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி இலக்கை 13 வது ஓவரில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

- Advertisement -

புது காரணம் சொன்ன புரூக்

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மென்கள் அனைவரும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சில் ரன் அடிக்க பெரிதும் சிரமப்பட்டது தெரிந்தது. குறிப்பாக வருண், பிஷனாய் மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவற்றில் வருண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளுடன் மூவரும் சேர்த்து 12 ஓவரில் 67 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் புரூக் கூறியதாவது “வருண் சக்கரவர்த்தி ஒரு சிறந்த பந்து வீச்சாளர் தான் ஆனால் கொல்கத்தாவில் இரவு புகை மூட்டத்துடன் இருந்தன, அதில் ரன்கள் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. சென்னையில் காற்று சற்று தெளிவாக உள்ளது மற்றும் பந்தை சற்று எளிதாக பார்க்க முடியும் என்று நம்புகிறோம்” என கூறினார்.

சுழற்பத்துவீச்சை எதிர்கொள்ள திட்டம்

வருண் போன்ற பத்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திட்டமிருப்பதாக கூறியுள்ளார் புரூக். 2022 T20 உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் புரூக் IPL போட்டிகளில் சதமடித்து உள்ளார்.

- Advertisement -

இருப்பினும் தனது ஆட்டத்தை மேலும் தரம்யுர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியது “T20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமான விஷயமாக இருக்கலாம், குறிப்பாக நான் எப்பொழுதும் அதை முறியடிக்க முயற்சி செய்கிறேன் என்பதாலும் இருக்கலாம், ஒருவேளை நான் சற்று சுதாரித்து வேண்டும் என நினைக்கிறேன், பார்ப்போம்.”

மேலும் அவர் கூறியது “எனக்கு ஒரு தனி வழி இருப்பதாக நான் நினைக்கிறேன். அதையே தொடர்வதும் அடிக்கடி அதிலேயே பயணிகவும் விரும்புகிறேன், நான் மிடில் ஆர்டரில் வருகிறேன், அதனால் நான் எதிர்கொள்ளும் முதல் சில பந்துகள் பொதுவாக ஆஃப் ஸ்பின் ஆகும். நான் சீக்கிரம் வெளியேறினால், அது பொதுவாக ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக இருக்கும், எனவே சுழலுக்கு எதிராக எனது புள்ளிவிவரங்கள் சிறப்பாக இல்லை, ஆனால் சில பகுதிகளில் எப்போதும் விமர்சனங்கள் இருக்கும்’ என தெரிவித்தார் புரூக்.

புரூக் வருண் இடையே கடும் போட்டி நிலவி வருவதால் இரண்டாவது போட்டியில் இருவரது ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles