2024 மகளிர் டி20ஐ உலகக் கோப்பையின் மிக முக்கிய போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிவியது. போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சொந்த அணி வீரர்களையே மட்டம் தட்டி பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரிய கோபத்தை உண்டாக்கியுள்ளது.
இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோற்ற பிறகு இலங்கை, பாகிஸ்தான் ஆகிய இருவருடனும் அபார வெற்றியைப் பூர்த்தி செய்து 4 புள்ளிகள் பெற்றது. ஆஸ்திரேலியா அணியுடனான கடைசி லீக் போட்டியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு சுலபமாக கிடைக்கும் நிலையில் இந்திய மகளிர் அணி இருந்தது.
துவக்கத்தில் சற்றுத் தடுமாறினாலும் ஆஸ்திரேலியா அணியின் ஹாரிஸ் 40 ரன்கள் மற்றும் கேப்டன் மெக்கராத் 32 ரன்களுடன் அணியை மீட்டனர். பின்னர் எலிஸ் பெர்ரி அதிரடியான 32 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் 151 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. எட்டக் கூடிய இலக்காக இருந்தாலும் பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இறுதிவரை போராடி 54 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் தீப்தி ஷர்மா ஓரளவு ஆதரவு அளித்து 29 ரன்கள் அடித்தார். மற்றப்படி யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. போட்டியின் முக்கியமான கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் ஃபார்ம்மில் இருந்த கவுர் பவுண்டரி அடிக்க முயற்சிக்காமல் சிங்கிள் தட்டியது தெரிய தவறு. இது ரசிகர்களின் கடுப்பை சம்பாதித்து.
மேலும் கடுப்பேற்றும் வகையில் போட்டி முடிந்த பிறகு சொந்த அணியையே மட்டம் தட்டும் விதமாக பேசியுள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் பேசியதாவது, ” ஆஸ்திரேலியா அணியில் அனைவரும் அணிக்கு பங்களிக்கிறார்கள், ஒருவர் அல்லது இருவரை நம்பி மட்டும் அந்த அணி இல்லை. அவர்கள் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள், எளிதாக ரன்கள் சேர்க்க விடவில்லை. “
” ராதா சிறப்பாக பந்துவீசியதோடு பீல்டிங்கிலும் நன்றாக செயல்பட்டார். அது போன்ற ஆல்ரவுண்டர் வீராங்கனைகள் இன்னும் அணிக்குத் தேவை. 152 என்பது எட்டக் கூடிய இலக்கு தான், ஆனால் கடைசியில் என்னாலும் தீப்த்தியாலும் லூஸ் பந்துகளை அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவிடம் நிறையக் கற்றுக் கொண்டோம். இன்னொரு போட்டி ஆட வாய்ப்புக் கிடைத்தால் நன்றாக இருக்கும். ” என்றார் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.
போட்டியில் தோல்வி அடைந்தாலும் சொந்த வீரர்களின் முயற்சியை பாராட்டுவது கேப்டன்களின் வழக்கம். ஆனால் இவ்வாறு வீரர்கள் போதவில்லை எனக் குற்றம் சாட்டியதை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் எதிர்க்கின்றனர். இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வி அடைந்தால் மட்டுமே இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

