சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்திய கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய ஐடியல் வீரர் யார் என்று கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வீரர்களிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்ட பொழுது பலரும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற வீரர்களை தங்களுடைய ஐடியல் வீரர்கள் என்று கூறினார்கள்.
மேலும் சில இளைய வீரர்கள் மகேந்திர சிங் தோனியையும் தன்னுடைய ஐடியல் வீரராக தேர்ந்தெடுத்தார்கள். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் உள்நாட்டு கிரிக்கெட் அதிகம் விளையாடிய வீரர் ஒருவரை தன்னுடைய ஐடியல் வீரராக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது தன்னுடைய ஐடியல் வீரர் வாசிம் ஜாபர் என்று தெரிவித்திருக்கிறார். வாசிம் ஜாபர் மும்பை அணிக்காக பத்தாயிரம் ரன்கள் தாண்டி உள்நாட்டு கிரிக்கெட்டில் எடுத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் அணியில் கிடைத்த வாய்ப்புகளில் அவரால் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் சச்சின் அளவுக்கு பார்க்கப்படுகிறார். இவரை தனது ஐடியல் வீரராக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

