இதுக்கே சந்தோஷப்பட கூடாது.. இன்னும் 10 இருக்கு.. விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியாவின் நச் பதில்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பையை வென்று சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்த முறையும் மிடில் வரிசை ஆல்ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக கோப்பையை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

மேலும் தன்னை பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களுக்கு எப்போதுமே பாண்டியா பதில் அளிக்க தவறியதில்லை. மேலும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு தனது ஆட்டத்தின் மூலமாக பதிலடி கொடுத்து வரும் ஹார்திக் ‘இந்த ஒரு கோப்பையோடு நின்றுவிடப் போவதில்லை இன்னும் 10 கோப்பைகளை வெல்வது எனது இலக்கு’ என்று நம்பிக்கையாகவும் சற்று திமிராகவும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சமீப காலமாக தனது செயல்கள் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வெற்றி பெறுவது மட்டுமே தனது இலக்கு என்று தனது வேலையில் உறுதியாக இருக்கிறார். மேலும் இந்த நம்பிக்கை ஒருபுறம் பாசிட்டிவாக இருந்தாலும் மறுபுறம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles