நேற்று ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்தார். மேலும் பந்துவீச்சில் மூன்று ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
கடந்த சில போட்டிகளாக எதிர்பார்த்த அளவுக்கு அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய அணிகளுக்கு எதிராக செயல்படவில்லை. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் அவர் மிகவும் மோசமான முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்டு இருந்தார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது ” நான் நேற்று பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது அதிக சக்தி கொடுத்து பந்தை அடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். பிறகு டைமிங் செய்து விளையாடினாலே என்னால் பெரிய சித்தர்கள் அடிக்க முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் விளையாடினேன். இந்த பேட்டிங் அணுகுமுறை எனக்கு நல்ல முறையில் பலன் கொடுத்து இருக்கிறது”
“அடுத்து புதிய பந்தில் பந்து வீசுவதை நான் எப்பொழுதும் விரும்புகிறேன். ஏனென்றால் பந்தை என்னால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். இதனால் விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பும் எனக்கு அதிகமாக இருக்கும். நேற்று எனது பந்துவீச்சும் நன்றாக இருந்தது. இந்த வகையில் எனக்கு நேற்றைய நாள் பேட்டிங் மற்றும் பவுலிங் என திருப்திகரமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

