நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மீண்டும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
கடந்த சில போட்டிகளாக விளையாடாத ஹர்திக் பாண்டியா நேற்று மீண்டும் திரும்பி வந்தார். இதுவரையில் மீண்டும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்த மும்பை அவர் வந்ததும் மீண்டும் மோசமாக விளையாடி தோல்வி அடைந்துள்ளது.
இது குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா “நாங்கள் இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். திலக் மற்றும் நான் இன்னும் சிறிது நேரம் விளையாடி இருந்தால் அந்த 20 ரன்னை எடுத்து இருப்போம். பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளம் கொடுத்ததை நான் வரவேற்கிறேன். அவர்கள் மிகவும் கடினப்பட்டு வரும் நிலையில் இது நல்ல விஷயம்”
“எங்கள் அணியில் ஆரம்பத்தில் இருந்து ஃபீல்டிங் சரியில்லை. இதன் காரணமாக நாங்கள் பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டு மோசமான நிலைக்கு சென்று விட்டோம். இந்த தோல்வியும் மிகவும் மோசமாக உணர வைக்கிறது” என்று கூறியிருக்கிறார்

