மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் அதிரடி ஆல்ரவுண்டர்.. பணத்தை வைத்து காரியம் சாதிக்கும் அம்பானி

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் 26 ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை விடுவித்து அதன் பட்டியலை பிசிசிஐயிடம் அளிக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோல் ஒவ்வொரு அணிகளும் கால்பந்தில் வருவது போல் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான காலமும் இன்று இரவு வரை இருக்கிறது. இந்த நிலையில் மும்பை அணி தற்போது ஒரு சிறப்பான காரியம் ஒன்றை செய்ய இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

- Advertisement -

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் குறையாக இருந்தது இந்திய ஆல்ரவுண்டர் இல்லாததுதான். ஹர்திக் பாண்டியா சென்றவுடன் அந்த இடத்திற்கு சரியான ஆல் இன்றும் மும்பை இந்தியன்ஸ் அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஹர்திக் பாண்டியாவை குஜராத் இடமிருந்து திரும்பி பெற்றுக் கொள்ள முயற்சிகளை செய்து வருகிறது. இதற்கான காய்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நகர்த்திவிட்டது. அதன் அடிப்படையில் குஜராத் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை 15 கோடி ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முயற்சிகள் நடக்க உள்ளன.

ஹர்திக் பாண்டியாவுக்கும் குஜராத் அணியும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த முயற்சியை மும்பை இந்தியன்ஸ் செய்ய உள்ளது. முதலில் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் கேட்பதாகவும் அதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை தர முன் வந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தொடர்வார் என்றும் வெறும் பணத்தை மட்டும் கொடுத்து ஹரிதிக்பாண்டியாவை வாங்க மும்பை அணி முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு வேலை இது நடந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பல மடங்கு உயரும். ஆனால் குஜராத் அணி ஏன் தங்களுடைய கேப்டனை விடுவிக்கிறது என்று குழப்பம் ஏற்படுகிறது. ஒருவேளை மும்பை அணி தங்களுடைய பவரை வைத்து காய் நகர்த்துகிறதா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles