நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து குறைந்த பந்துகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்கிற சாதனையை படைத்தார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது “நாம் எப்போதுமே போட்டிகளை வெல்வதற்காக தான் விளையாடுகிறோம். இன்று என்னால் சிறப்பாக விளையாட முடிந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பேட்டிங் செய்து முடித்துவிட்டு உள்ளே திரும்பிய பிறகு தான் இரண்டாவது அதிவேகஇரண்டாவது அதிவேக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்று கூறினார்கள். அட நான் அந்த முதலிடத்தை விட்டு விட்டேனே என்று நினைத்தேன்.
ஆனால் அந்த முதலிடம் யுவராஜ் சிங் பாய் இடம் இருப்பது மகிழ்ச்சி. நான் பேட்டிங் செய்ய உள்ளே சென்றபோது என் பேட்டிங் பார்ட்னரிடம் நான் முதல் பந்தில் சிக்சர் அடிப்பேன் என்று கூறினேன். அதேபோல இறங்கி வந்து சிக்சர் அடித்தது சிறப்பு, ஆனால் அதிக ரிஸ்க் எடுத்த போது அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது மகிழ்ச்சி. இன்னும் கடினமாக உழைப்பு, திட்டமிடல், தயாரிப்பு போன்றவை இருக்க வேண்டும் மேலும் நான் தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன்” என்று பேசி இருக்கிறார்.

