நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இந்திய அணி t20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 117 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகள் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் குவித்தார். இதில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மூன்று ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.
ஹர்திக் பாண்டியா ஸ்டெப்ஸ் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அர்ஸ்தீப் மற்றும் பும்ராவிற்கு பிறகு 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்றார். மேலும் பேட்டிங்கில் 1000 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய உலகின் முதல் ஆல் ரவுண்டர் என்கிற மகத்தான சாதனையையும் ஹர்திக் பாண்டியா நேற்று படைத்திருக்கிறார்.

