வாஷிங்டனுக்கு வாய்ப்பு தராதீங்க.. எதிர் டீம் டிரெஸ்ஸிங் ரூமை மிரட்டிய பையனுக்கு கொடுங்க – ஹர்பஜன் சிங் வலியுறுத்தல்

நாளை இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் யார் விளையாடுவார்கள்? என்பது குறித்து ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணியில் திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இருவரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சேர்க்கப்பட வேண்டும் எனவும், இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வந்தார்கள்.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் தேவையில்லை. மேலும் ரைட் லெப்ட் பேட்ஸ்மேன் யாராக இருந்தாலும் அக்சர் படேல் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எனவே அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வந்து விடுவார். இதில் எந்த மாற்றமும் இருக்காது”

- Advertisement -

“இதுபோல அதிரடி அபிஷேக் ஷர்மா எல்லா அணி டிரெஸ்ஸிங் ரூமையும் மிரட்டியவர். அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிச்சயம் ரன்கள் எடுக்கப் போகிறார். அதற்கு அவர் கணக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமையாக விளையாடினால் போதும். இப்போதைக்கு அவரை மாற்றி விட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வரவேண்டிய அவசியம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles