10 வருஷமா தோனி இப்படி பண்ணா யாரு தான் பேசுவா.. கிட்ட பேசுறதே இல்ல.. மரியாதை இல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை.. ஹர்பஜன் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் எம்.எஸ்.தோனி ஆகியோரின் நட்பு பற்றிய செய்தி இதுவரை பலருக்கும் தெரியும். பல முறை நாம் தொலைக்காட்சியில் ஹர்பஜன் சிங் மற்றும் எம்.எஸ்.தோனி கூட்டாக அழகான தருணங்களையும் உரையாடல்களையும் பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

இதில் இந்தியாவின் 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிகளையும் இருவரும் பகிர்ந்துள்ளனர். ஆனால் இப்போது அவர்களின் நட்பு விலகி உள்ளது, என ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

நாங்க பேசி 10 வருடமாகிறது:

ஸ்போர்ட்ஸ் நெக்ஸ்ட் உடனான சமீபத்திய உரையாடலில், “நான் தோனியிடம் இப்பொழுதெல்லாம் பேசுவதில்லை. நான் சிஎஸ்கேவில் விளையாடியபோது தான் நாங்கள் கடைசியாக பேசிக் கொண்டோம். நாங்கள் பேசி 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாங்கள் பேசாததற்கு தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த காரணமும் இல்லை; ஒருவேளை அவருக்கு இருக்கலாம். நான் அதற்கான காரணங்களை அறிய விரும்பவில்லை.

- Advertisement -

ஐபிஎல் இல் சிஎஸ்கே அணியில் விளையாடின பொழுது தான் நாங்கள் பேசிக்கொண்டோம். அதுவும் மைதானத்தில் தான் பேசிக் கொண்டோம். போட்டி முடிந்த பிறகு அவரும் என்னுடைய அறைக்குள் அவரும் வந்து பேசவில்லை நானும் அவருடைய அறைக்குள் போய் பேசவில்லை”.

நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே தொடர்பில் உள்ளேன்:

மேலும் அவர், “எனக்கு அவருடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது தொழிற்சார்ந்த முறையிலோ எந்த பிரச்சனையும் இல்லை. தோனிக்கு எதையாவது சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னிடம் தொலைபேசியில் அழைக்கலாம். அவர் சொல்ல விருப்பப்பட்டால் சொல்லியிருப்பார். நான் அவரை அழைக்க முயற்சிக்கவில்லை, ஆனாலும் எனக்கு அவரிடம் பேச அதிக ஆர்வம் உள்ளது.

- Advertisement -

நான் அழைக்கும் போது என்னுடைய அழைப்பை ஏற்கும் நண்பர்களிடம் மட்டும்தான் தொடர்பில் இருக்கிறேன். எனக்கு மற்றவர்களுடன் தொலைபேசியில் பேச அதற்கான நேரமும் இல்லை. நான் என்னுடைய நண்பர்களிடம் மட்டுமே தொடர்பில் இருக்கிறேன். ஒரு உறவு என்பது கொடுக்கவும் செய்யும் அதே நேரத்தில் நம்மிடமிருந்து பறிக்கவும் செய்யும்.

நீங்கள் அதை மதித்தீர்கள் என்றால் என்னுடைய நம்பிக்கையை பொறுத்தவரை அதுவும் உன்னை மதிக்கும் அல்லது உனக்கான நேரத்தையும் கொடுக்கும். நான் உங்களை ஒன்று அல்லது இரண்டு முறை அழைக்கிறேன் என்றால் நீங்கள் என்னுடைய அன்புக்கு உட்பட்டவர்களாய் இருப்பீர்கள் அதனால் தான் நான் ஒன்றல்லது இரண்டு முறை உங்களை அழைக்கிறேன் ” என்று கூறி முடித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles