வருகிற t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் விளையாடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில் இதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக சாடி இருக்கிறார். இவ்வளவு தேச பக்தி இருந்தால் எதற்காக ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்கள் என்று சில விமர்சனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இதனால் உங்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது. இது வெறும் ஆணவத்தை காட்டுவதாக தான் உள்ளது. நீங்கள் உண்மையிலேயே இதனை செய்வதாக இருந்தால் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருக்கிறதா? என்று பார்ப்போம். பங்களாதேஷ் அணிக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் இது உண்மையிலேயே வெற்று நாடகம் தான்.
உண்மையிலேயே இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறக்கூடாது என்று உங்கள் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்று கேளுங்கள்.? உங்களுக்கு அவ்வளவு தேச பக்தி இருந்தால் எதற்காக ஆசிய கோப்பை தொடரில் விளையாடினீர்கள் புறக்கணிக்க வேண்டியது தானே. ஏனென்றால் உங்களுக்கு அப்போது வருவாய் தேவைப்பட்டது அதற்காக விளையாடினார்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருப்பது என முடிவெடுத்து விட்டால் இருங்கள். ஐசிசி அதற்கான அபராதத்தையும் தண்டனையையும் கொடுக்கும். பிற்காலத்தில் எந்த போட்டிகளையும் நடத்த முடியாது நிலைதான் ஏற்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

