நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் டேவிட் மில்லர் எடுத்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் இது குறித்து ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த போட்டிகள் டெல்லி வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிங்கிள் ரன் எடுப்பதற்கு டேவிட் மிலருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து கடைசிப் பந்தை அவர் அடிக்க தவறி விட்டு ரன் ஓடினார். அவருடன் இருந்த குல்தீப் வேகமாக ஓடாமல் ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக டெல்லி அணி பரிதாபமாக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங் “டேவிட் மில்லர் ஹீரோவாக பார்த்து கடைசி இரண்டு ரன்களை தானே எடுப்பதாக சொன்னார். என்ன நடந்தது அவர் போட்டியையும் தோற்று விட்டார். அவர் நேற்று விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது இன்னும் அவர் குஜராத் அணியில் இருப்பதைப் போலவே இருந்தது. அவர் உடன் இருந்த குல்தீப் யாதவை நம்பியிருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

