நேற்று குஜராத் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆச்சரியப்படும் வகையில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் அது அணியின் கேப்டன் சுப்மன் கில் இது குறித்து பேசி இருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 247 ரன்கள் குவித்து அசத்தியது. தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி குறித்து பேசி உள்ள சுப்மன் கில் ” இந்த ஆடுகளம் 247 ரன்கள் எடுப்பதற்கானதே இல்லை. 200 முதல் 210 ரன்கள் எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் ஆரம்பத்திலேயே கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம் இதுதான் தோல்விக்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது”
“இந்த வகையில் பார்க்கும்போது இந்த போட்டியில் வெற்றிக்கு நாங்கள் தகுதி இல்லாதவர்கள். அடுத்து குவாலிபயர் நடக்க இருக்கும் நிலையில் இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த தோல்வி ஒரு முன்னெச்சரிக்கையானது” என்று கூறியிருக்கிறார்.

