டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற, கவுதம் கம்பீர். இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக முதலில் ஒருநாள் தொடரை இழந்தது, பின்னர் நியூசிலாந்து அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்பட்டது என அடுக்கடுக்கான தோல்விகளை அடுத்து பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதனை, இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா, “கம்பீருக்கு ஆறு மாசமாவது நேரம் கொடுக்கப்பட வேண்டும் உடனே அவருடைய தலைமைத்துவத்தை மதிப்பிடுவது நியாயம் அற்றது…”எனக் கூறியுள்ளார்.
அநீதி இழைக்கிறோம், ஜடேஜா:
அஜய் ஜடேஜா, “நான் என்ன நினைக்கிறேன் என்றால், கம்பீருக்கு நாம் அநீதி இழைக்கிறோம், அவருடைய பயிற்சித் திறமையை குறுகிய நேரத்துக்குள்ளே ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள், அவரை நல்லவர் என்று நம்பவில்லை என்றால், அவருடைய செயல்பாட்டையும் நீங்கள் நம்ப மாட்டீர்கள், அவருக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்குவது இது சரியான நேரம் அல்ல. இது அவருடைய செயல்பாட்டை ரசிக்க வேண்டிய நேரம்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்துள்ளார்.
நேரம் காலம் வரும்:
மேலும் அவர், “எல்லாவற்றுக்கும் சில கட்டங்கள் உண்டு, சில நேரம் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சில நேரம் அதில் நீங்கள் தோல்வியடைவீர்கள். இந்த இரண்டில் என்ன நடந்தாலும் நான் அவரை ஆறு மாதத்திற்குள்ளாகவே மதிப்பிட மாட்டேன்” என்று கூறினார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின், முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இதனை சுட்டிக்காட்டி அவர் கூறியதாவது, “நீங்கள் அவரிடம் என்ன கேட்டுக்கொள்கிறீர்கள், இப்பொழுது என்ன பெறுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். அவர் மிகவும் தெளிவான மனிதர். அவருடைய வாழ்க்கை முழுவதுமே அவர் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். நீங்கள் இப்பொழுது என்ன பார்க்கிறீர்களோ, அதைத்தான் அவரும் எதிர்பார்த்த விஷயமும், எனவே எல்லாவற்றிற்கும் நேரமும் காலமும் கூடிவரும்” என்று கம்பீரே குற்றம் சாட்டினோரே விமர்சித்துள்ளார், ஜடேஜா.

