கோப்பையை தர அழைக்காத விவகாரம்.. வருத்தப்பட்ட கவாஸ்கர்.. விளக்கம் அளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கரை பரிசளிப்பு நிகழ்விற்கு அழக்காதது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விளக்கம்

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 2-1 என்று முன்னிலை வகித்த ஆஸ்திரேலியா அணி கடைசி போட்டியான 5வது போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது இப்போட்டியில் ட்ரா செய்தால் போதும் என களம் இறங்கிய நிலையில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

- Advertisement -

இந்நிலையில் கோப்பை வழங்கும் விழாவில் ஆலன் பார்டார் ஆஸ்திரேலியா அணிக்கு கோப்பை வழங்கினார் ஆனால் கோப்பையுல் தமது பெயர் உள்ள போதும் தன்னை அழைக்கவில்லை எனவும் அங்கு இருந்திருக்க வேண்டும் எனவும் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்தார்.

- Advertisement -

வருத்தம் தெரிவித்த கவாஸ்கர்

“நிச்சயமாக கோப்பை வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதை நான் விரும்பியிருப்பேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது பார்டர்-கவாஸ்கர் கோப்பை மற்றும் இது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைப் பற்றியது. அதாவது, நான் இங்கே இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, கோப்பை வழங்கும் நிகழ்ச்சிக்கு வரும்போது ஆஸ்திரேலியா வென்றது ஒரு பொருட்டல்ல அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். அது பரவாயில்லை. நான் இந்தியன் என்பதால் என்னை அழைக்கவில்லை. எனது நல்ல நண்பர் ஆலன் பார்டருடன் கோப்பையை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைவேன்” இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

“ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரையும் மேடைக்கு செல்லும்படி கேட்டிருந்தால் அது விரும்பத்தக்கதாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் ஆனால் இந்தியா வெற்றி பெற்றால் சுனில் கவாஸ்கர் அவர்களும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஆலன் பார்டர் ஆஸ்திரேலியாவுக்கு பரிசளிப்பார் என்பது தான் திட்டம்” என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரி ஒருவர் இந்த விஷயத்தை விரிவாகக் கூறினார்.

- Advertisement -

நடந்து முடிந்த இந்த தொடருக்கு முன்பு 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் பார்டர் – கவாஸ்கர் தொடர் நடைபெற்றது அதில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து சுனில் கவாஸ்கர் அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கோப்பையை வழங்கினார். அந்த நேரத்தில் ஆலன் பார்டர் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை முதன் முதலில் வெற்றிபெற்றுள்ளது ஆஸ்திரேலியா அணி. கடைசியாக 2014 – 15 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles