பிசிசிஐ முக்கிய நபர் ரோஹித்துக்கு சிபாரிசு செய்தும் பலனில்லை.. ரோஹித்தை நீக்க கம்பீர் திட்டவட்ட முடிவு.. காரணம் இதுதான்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்க, இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இயலும் என்ற நெருக்கடியில் உள்ளது.

- Advertisement -

ஆனால் போட்டிக்கு முன்பு இந்திய அணியில் மிகப் பெரிய ஷாக். கேப்டன் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மிகவும் மோசமான பார்மில் இருக்கும் ரோஹித் ஷர்மா இந்தத் தொடரில் இதுவரை வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த 15 இன்னிங்சில் வெறும் 10 தான் சராசரி.

- Advertisement -

முதன் டெஸ்ட்டில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற, பின்னர் ரோஹித் கேப்டனாக வந்தவுடன் அடுத்த மூன்று போட்டிகளில் தடுமாறியது அவரது கேப்டன்சிக்கும் கெட்டப் பெயரைக் கொடுத்துள்ளது. இதனால் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்க கோச் கௌதம் கம்பீர் முடிவு செய்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதனை மறைமுகமாக கூறினார்.

- Advertisement -

பின்னர் சில மணி நேரங்களில், ரோஹித் ஷர்மாவே அவரது விருப்பத்தில் அணியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்துவிட்டன. ரோஹித்துக்கு பதிலாக சுப்மன் கில் 3வது இடத்தில் களமிறங்க, மீண்டும் கே.எல்.ராகுல் ஓப்பனிங் செய்யுள்ளார். ரோஹித்தை அணியில் இருந்து நீக்குவதை அறிந்த ஓர் பிசிசிஐ முக்கிய உறுப்பினர் கம்பீரிடம் அதைச் செய்ய வேண்டாமென கேட்க, அதனை கம்பீர் கடுமையாக மறுத்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் கடைசிப் போட்டியாக சிட்னி டெஸ்ட் இருக்குமாறு இந்தப் போட்டியில் ஆட வைக்க அனுமதிக்குமாறு கம்பீரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதே குறிக்கோள் எனக் கூறி அதனை மறுத்துள்ளார். பின்னர் ரோஹித் ஷர்மா தானே விலகுவதாக பும்ரா மற்றும் அஜித் அகர்க்கரிடம் கூறிவிட்டார். இது பற்றி கான் கம்பீரிடம் பேசாமல் நகர்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles