நடப்பு இந்தியக் கிரிக்கெட் அணியின் மிகவும் குறைந்து மதிப்பிடப்படும் (அன்டரேட்டட்) வீரராக அமைவதைச் சுட்டிக் காட்டி அவரை மீடியாவில் பாராட்டியுள்ளார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்.
புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீர், இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் நட்சத்திர கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமென இதற்க்கு முன்பு பல மீடியாவில், வீடியோக்களில் இதைப் பற்றி பேசியுள்ளார். அது போலத் தான் இந்திய அணியையும் அவர் தற்போது வழி நடத்தி வருகிறார். அனைத்து வீரர்களுக்கும் அவரவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பாராட்டுகள், அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் கம்பீர்.
நடந்துக் கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியும் பெரிதாகப் பாராட்டுகள் பெறாத வீரரைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் கம்பீர். அவர் கூறியதாவது, ” ரவீந்திர ஜடேஜா எப்போதும் ஓர் அன்டரேட்டட் வீரராகச் சென்றுவிடுகிறார். டெஸ்ட், டி20ஐ, ஓடிஐ என எந்த வடிவக் கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர் தனது முழுவதையும் கொடுக்கிறார். பேட்டிங், பவுலிங் இரண்டில் மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் பெரிதாகப் பங்களிக்கிறார். “
” இதனால் நான் அவரை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். எங்களது ட்ரெஸ்சிங் ரூம் அவரை மதிப்பை நன்கு அறியும். எங்கள் அணியின் ரூமுக்கு வெளியில் நடக்கும் விஷயங்கள் தேவையற்றது, அவர் எங்களுக்கு மிகுந்த மதிப்பான வீரர். ” என்று புகழ்ந்து தள்ளினார் கௌதம் கம்பீர்.
தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறைந்த விக்கெட்டுகள் என்றாலும் 4.5 என்ற எக்கனாமியில் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பந்துவீசியுள்ளார். இது பெரிதும் பேசப்படாத ஒன்றாக இருப்பதால் கௌதம் கம்பீர் மீடியாவில் அவரைப் புகழ்ந்துப் பேசியுள்ளார்.

