2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அவர்களது முதல் போட்டியை இன்று (பிப்ரவரி 20) வங்கதேச அணிக்கு எதிராக ஆடுகிறது. இதற்கான பிளேயிங் லெவனில் ஒரு முக்கிய இந்திய வீரரை கௌதம் கம்பீர் ஒதுக்குவதாக செய்திகள் வந்துள்ளன.
துபாயில் நடக்கும் இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஸ்பின்னர்களுடன் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தாலும் ஐசிசி தொடர்களில் ஷமி இந்தியாவுக்கு செய்தவை பெரிய நம்பிக்கையை ஊட்டும்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி 5 ஜடேஜா, அக்ஷர், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி என 5 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ளது. பெரிதாக ஸ்பின் எடுபடாத துபாய் ஆடுகளங்களுள்ளு எதற்கு 5 ஸ்பின்னர்கள் என்ற விமர்சனம் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இதற்க்கு பிளான் உள்ளது என கம்பீர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணியில் டாப் ஆர்டரில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்திய அணி ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்கும். இதனால் ஒரு மாதிரியான ஸ்பின்னர்கள் ஜடேஜா மற்றும் அக்ஷரில் ஒருவர் விலக வேண்டிய கட்டாயம் இருக்கும். அது ஜடேஜா தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என கிரிக்கெட் வல்லுனர்கள் சாவ்லா, மைக் ஹெஸன் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, ” ஜடேஜா விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் உடல் மொழியை வைத்துப் பார்த்தால் அவர் ஜடேஜாவிடம் சென்று, தான் எடுத்தது தான் முடிவு என்றும் ஜடேஜாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை ஆட வைப்பதாகவும் கூறியுள்ளார். ” என்றார். ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் இருவரில், பேட்டிங்கை வைத்து அக்ஷர் முன்னிலையில் தேர்வு செய்யப்படுவார்.
அண்மையில் நடந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ரவீந்திர ஜடேஜா மிகவும் எக்கனாமிக்கலாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரின் அனுபவம் முக்கிய ஐசிசி தொடரில் அவசியம் என்ற போதிலும், அவர் அணியில் இடம்பெறாமல் போனால் அது சற்று முட்டாள்தனமே.

