விராட் கோலியும் என்னைப் போல்தான்.. அதனால் மசாலா போட வேண்டிய தேவையில்லை.. கௌதம் கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலக கோப்பையோடு நிறைவடைகிறது.

- Advertisement -

இந்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த திங்கட்கிழமையோடு முடிவடைந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக அடுத்தது கௌதம் கம்பீர்தான் வரப்போகிறார் என்று தகவல்கள் பெரிதாக வரும் நிலையில், அது குறித்து கம்பிரோ அல்லது பிசிசிஐயோ இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கவில்லை.

- Advertisement -

ஆனால் இந்திய உள்கட்டமைப்பு நன்கு அறிந்த ஒருவரை தான் நாங்கள் பயிற்சியாளர் பதவிக்கு தேடுகிறோம் என்று பிசிசிஐயின் செயலாளர் ஜெயிஷா ஏற்கனவே அறிவித்திருந்தார். பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியா வீரர்களை இந்திய நிர்வாகம் அணுகியதா? என்று கேட்ட கேள்விக்கு நாங்கள் எந்த ஆஸ்திரேலியா வீரரை அணுகவில்லை என்று கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே விவிஎஸ் லக்ஷ்மனை அணுகிய நிலையில் அவர் மறுப்பு தெரிவிக்க, தற்போது கம்பீர் பக்கம் சாய்ந்து இருக்கிறது. லக்ஷ்மன் ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் அது விராட் கோலியின் கேரியருக்கு சிக்கல் ஏற்படும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கம்பீர் கருத்து தெரிவிக்கும் பொழுது
” இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனக்கும் விராட் கோலிக்கும் இடையே நல்ல ஒரு நட்பு இருக்கிறது. தன்னை அர்ப்பணித்து அந்தந்த அணிகளின் வெற்றிக்கு உதவ என்னைப்போலவே அவரும் இருக்கிறார். எங்கள் உறவு பொதுமக்களுக்கு மசாலா கொடுப்பது அல்ல’ என்று கூறி முடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவருக்கு இடையேயான நட்பு என்பது 2008 காலகட்டத்தில் இருந்தே ஆரம்பித்ததுதான். 2009ஆம் ஆண்டில் ஒருமுறை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைப்பார்கள்.

இதையும் படிங்க:விராட் கோலி ரசிகர்கள் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.. பரபரப்பை கிளப்பும் சைமன் டவுல்

அப்போது 150 ரன்கள் அடித்த கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்ட போது அதை கௌதம் கம்பீர் வாங்க மறுத்து 109 ரன்கள் அடித்த இளம் வீரர் விராட் கோலிக்கு கொடுத்து அவரை ஊக்கப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதுபோன்ற அவர்களின் நட்பு ஐபிஎல்லில் ஏற்படும் இந்த சிறிய சண்டைகளுக்காக ஒருபோதும் மாறாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles