சிஎஸ்கே, மும்பையை விட நாங்கள் ஒரு படி மேலே இருக்க வேண்டும்.. கேகேஆர் ஆலோசகர் கௌதம் கம்பீரின் ஆசை

தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. மூன்று கோப்பைகளை கொல்கத்தா அணி வென்றிருந்தாலும் கௌதம் கம்பீர் மேலும் தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சீசனில் தொடக்கம் முதலே பலமாக திகழ்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி அதில் ஒன்பது போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளில் தோல்வியும் தழுவி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு முதல் பிளே ஆப் சுற்றில் சன்ரைசஸ் அணியை வீழ்த்தி நேராக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

பின்னர் இறுதிப் போட்டியிலும் வந்த சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. முதலில் கௌதம் கம்பீரின் தலைமையில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் கோப்பையை வென்றிருந்தது கொல்கத்தா அணி.

- Advertisement -

அதற்குப் பிறகு தற்போது கௌதம் கம்பீர் ஆலோசனையில், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கொல்கத்தா அணி திரும்பவும் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணியால் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை.

அதற்குள் கௌதம் கம்பீரும் அரசியலில் கவனம் செலுத்த, அதற்குப் பிறகு புனே அணி இவரை ஆலோசகராக நியமித்தது. அந்த இரு சீசன்களிலும் புனே அணியை பிளே ஆப் சுற்று வரை முன்னேற காரணமாக இருந்தார். அதற்குப் பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கானின் அழைப்பிதழின் பேரில் திரும்பவும் கேகேஆர் அணிக்கு வந்த கம்பீர் இந்த முறை சிறப்பாக வழி நடத்தி சாம்பியன் பட்டம் பெரும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்.

- Advertisement -

மூன்றாவது கோப்பையை வென்ற பிறகு கூறிய கௌதம் கம்பீர் இன்னும் மூன்று கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து கம்பீர் கூறும் பொழுது
“கொல்கத்தா அணி இந்த முறை சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் மூன்று கோப்பைகளை கொல்கத்தா அணி வென்று அதிக கோப்பைகளை வென்ற அணிகளில் முதல் இடத்தில் இருக்க வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடியது” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:பாண்டியா ஒருத்தர்னால.. இந்தியா பேட்டிங், பௌலிங் ரெண்டுமே வீக்கா இருக்கு.. கூறுகிறார் தமிழக முன்னாள் வீரர்

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதற்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா அணி மூன்று முறை கோப்பையை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது கௌதம் கம்பீர் பேட்டியில் இன்னும் மூன்று கோப்பைகளை வென்று இந்த இரண்டு அணிகளையும் முந்த வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles