முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் கில்லுக்குப் பதிலாக வந்த சர்பராஸ் கான் அதிரடியான 150 அடித்த பெரும் பெயரைப் பெற்றார். அடுத்தப் போட்டியில் கில் அணிக்குத் திரும்பும் நிலையில் நடப்பு அணியில் யாரேனும் ஒருவர் வழிவகுக்க நேரிடுகிறது. அது கே.எல். ராகுலாக மட்டுமே இருக்க வேண்டும், அவரை உட்கார வையுங்கள் என சமூக வலைத்தளத்தில் இந்திய ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இதற்குக் காரணம், அவரின் மோசமான ஃபார்ம் தான். வங்கதேச அணிக்கு எதிராக பெரிதாக சோபிக்காத அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் சுதப்பியுள்ளார். தன் சொந்த ஊரான பெங்களூரில் கூட டக் அவுட் மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இது குறித்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியதாவது, ” சமூக வகைதங்கள் அல்லது cricket வல்லுனர்கள் மற்றும் வர்னையாளர்கள் என்ன பரிந்துரைக்கிறார்களோ என்பது எங்களுக்கு முக்கியம் இல்லை. எங்கள் அணியில் யார் விளையாட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க கூடாது. கே.எல்.ராகுல் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி அதிரடியான அரை சதத்தைப் பதிவு செய்துள்ளார். பெரிதாக ரன்கள் அடிக்க வேண்டுமென அவர் தீவிரமாக உள்ளார், அவருக்கு உறுதுணையாக நாங்கள் நிச்சயம் ஆதரவளிப்போம். “
சமீபத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் கே.எல்.ராகுலை தொடர்ந்து நம்பர் 6ல் விளையாட வாய்ப்புக் கொடுக்கப்படும் என்றார். தற்போது கம்பீரும் ஆதரவாக பேசுவதைப் பார்க்கையில் நாளை நடக்கும் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் நாளை நடக்கும் டெஸ்ட்டில் தொடர்வார் எனத் தெரிகிறது. இதனால் கில்லும் அணிக்குத் திரும்பும் பட்சத்தில் சர்பராஸ் கான் 150 அடித்திருந்தும் வெளியில் அமர்வார் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் காயம் காரணமாக பண்ட் வெளியேற கே.எல்.ராகுல் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

