சுப்மன் கில்லை நட்டாற்றில் விட்ட கம்பீர்.. அவசர அவசரமாக டெல்லி வந்த இந்திய அணி பயிற்சியாளர்.. காரணம் என்ன?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்கள் கொண்டு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

டெல்லி வந்த கம்பீர்

இதனால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பணிகள் அதிகரித்துள்ளது.ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சி தொடர்பான அனுபவம் கொஞ்சம் கூட இல்லாத சுப்மன் கில்லுக்கு கம்பீர் ஏராளமான நேரங்களில் துணையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற தோல்வியை சந்தித்துள்ளது. 

- Advertisement -

இதனால் கம்பீரும் தன்னை பயிற்சியாளராக நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் திடீரென லண்டனில் இருந்து உடனடியாக புறப்பட்டு இந்தியா திரும்பி இருக்கிறார். கவுதம் கம்பீரின் தாய்-க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் உடனடியாக லண்டனில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார்.

- Advertisement -

ஐசியூவில் சிகிச்சை

தற்போது கவுதம் கம்பீரின் தாய் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கெண்ட் மைதானத்தில் இந்தியா ஏ அணி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவுதம் கம்பீர் அங்கிருந்து புறப்பட்டு வந்துள்ளதால், அந்த பொறுப்பு ரியான் டென் டஸ்காட்டேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் ஆகியோரும் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றனர். தனது தாயை சந்தித்த பின் கம்பீர் எப்போது மீண்டும் லண்டன் திரும்புவார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அடுத்த 2 நாட்களுக்குள் கம்பீர் மீண்டும் புறப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles