முதலில் ஹர்திக் பாண்டியா.. இப்போது ஜஸ்பிரிட் பும்ரா.. சீனியர் வீரர்களுக்கு கேப்டன்சி கொடுக்காமல் ஆப்பு வைக்கும் கம்பீர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் இந்திய அணியின் சீனியர் வீரராக ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய இருவர் மட்டுமே இருக்கின்றனர். இதில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமனம் செய்யப்படும் அளவிற்கு பும்ரா மட்டுமே இருந்து வருகிறார்.

- Advertisement -

உள்நாட்டில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும், வெளிநாட்டில் பவுலர்களுக்கான திட்டம், பிட்சின் தன்மை என்று பும்ரா அனைத்தையும் துல்லியமாக கணித்து பவுலிங் செய்யக் கூடியவர். அதனை சக பவுலர்களுக்கும் பகிர்வதால், அவர்களாலும் சிறப்பாக செயல்பட முடியும். ரோகித் சர்மா கேப்டனாக இருந்தாலும் கூட, பும்ரா பவுலிங் கேப்டன் என்று தாராளமாக சொல்ல முடியும்.

- Advertisement -

பும்ரா – கம்பீர்

அதேபோல் இந்திய அணியையும் 3 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி இருக்கிறார். இந்த சூழலில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென சுப்மன் கில்லை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அத்தனை தகுதிகள் இருந்த போதும், பும்ராவுக்கு கேப்டன்சி கொடுக்காமல் இருப்பதற்கு முன் அவரின் உடல்நிலை மற்றும் காயமே காரணமாக சொல்லப்படுகிறது. பும்ரா மிக முக்கியமான வீரர் என்பதால், அவர் முக்கிய போட்டிகளிக் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது. கேப்டன்சி கொடுத்தால், அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டிய நிலை உருவாகும்.

ஹர்திக் – கம்பீர்

இதனால் பும்ரா காயமடைந்து வெளியேற வாய்ப்புள்ளதால், கேப்டன்சி மறுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் காயத்தை காரணமாக கூறி, சூர்யகுமார் யாதவை கேப்டனாக பிசிசிஐ தேர்வு செய்தது.

- Advertisement -

அப்போதும் கம்பீரின் கைகளே ஓங்கி இருந்தது. தற்போது அதே காரணத்தை சொல்லி, பும்ராவை பிசிசிஐ தட்டி கழித்துள்ளது. இப்போதும் கம்பீரின் கைகளே ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியை தனது கைப்பிடிக்குள் வைத்து கொள்வதற்காகவே அனுபவம் குறைந்த வீரர்களை கம்பீர் தேர்வு செய்வதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles