ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இழந்த நிலையில் ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
மேலும் டெஸ்ட் அணியில் இருக்கும் சீனியர் வீரர்களும் பெரிய அளவில் சாதிப்பதில்லை. இதனால் அணியில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டிக்கு பிறகு செய்தியாளருடன் கம்பீர் விளக்கமாக பதில் கூறினார். அப்போது பேசிய அவர், “எந்த ஒரு வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச முடியாது. ஏனென்றால் அது அவர்களை பொறுத்தது”.
“ஆனால் இந்த வீரர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. இந்திய அணியை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த வீரர்கள் எல்லாம் மனதளவில் கடினமானவர்கள். இவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் இந்திய அணியின் நலனை கொண்டு முடிவெடுப்பார்கள்.
என்னுடைய பணி அனைத்து வீரர்களையும் சரிசமமாக நடத்துவது தான். நான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் தருவதில்லை. நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரராக இருந்தாலும் சரி, அறிமுக வீரராக இருந்தாலும் சரி,அவர்களை சரிசமமாக நான் பார்க்க வேண்டும்.
இனி டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என வீரர்கள் நினைத்தால் அனைவரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். இந்திய அணியில் தற்போது மாற்றம் ஏற்படுமா என்று தற்போது எதிர்பார்ப்பது தவறு.
ஏனென்றால் அடுத்ததாக நாம் 5 மாதங்களுக்கு பிறகு தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகிறோம். இந்த ஐந்து மாதத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யார் வேண்டுமானாலும் மாறலாம். ஒரு வீரரின் மனநிலை முற்றிலும் மாறலாம்.
எனவே அது குறித்து இப்போது முடிவெடுக்க கூடாது எனவே இங்கிலாந்து தொடரில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்
ஆனால் இந்திய அணிக்கு எது நல்லதோ அதற்கு தகுந்தார் மாதிரி முடிவு எட்டப்படும்” என்று நான் நம்புகிறேன் என்று கம்பிற்கு கூறுகிறார்

