இந்தியாவுக்காக ஆடுறது அவ்ளோ ஈஸி இல்ல.. அப்படி இந்தியாவுக்கு கிடைத்த தரமான வீரர்தான் இவர்- கவுதம் கம்பீர் பேட்டி

ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள அரை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

- Advertisement -

கயானாவில் நடைபெற உள்ள போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தயாராகி வரும் வேளையில், டி20 போட்டியை பொறுத்தவரை 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தாலோ அல்லது இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தாலோ போட்டியே மொத்தமாக மாறிவிடும். அப்படிப்பட்ட இந்த இந்திய வீரர்தான் இந்தியாவிற்கு கிடைத்த சொத்து என்று கௌதம் கம்பீர் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

முன்பு ஒரு பேட்டியில் ரோகித் சர்மா பேசியது போல் ஒரு வீரர் 50 ரன்கள் அல்லது 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. போட்டியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு குறைந்த பந்துகளில் நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடினாலே டி20 கிரிக்கெட் பொறுத்த வரை ஆதிக்கம் செலுத்த முடியும். தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய வீரர்கள் இதே பாணியைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.

- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா மட்டுமே ஒரே ஒரு அரை சதம் அடித்திருந்தார். ஆனால் மற்ற அனைத்து வீரர்களும் குறைந்த பந்துகளில் 30 ரன்கள் 35 ரன்கள் என்று குவிக்க, இந்திய அணி அந்தப் போட்டியில் மட்டும் 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்து இருந்தது. களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் நல்ல ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடினாலே அதிக ரன்களை குவிக்க முடியும் என்ற பார்முலா தற்போது இந்திய அணி பின்பற்றி வருகிறது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அதுபோலத்தான் ஒரு முக்கிய வீரராக விளங்கி வருகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அவரை பாராட்டி பேசி இருக்கிறார். இது குறித்து கம்பீர் விரிவாக கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியாவிடம் திறமை மற்றும் மன உறுதி போன்ற காரணிகள் இருப்பதால்தான் அவர் இந்தியாவின் மிக முக்கிய வீரராக விளங்கி வருகிறார். ஒரு பேட்ஸ்மேன் ஆக, ஒரு பந்து வீச்சாளராக, ஒரு ஃபீல்டராக இந்திய அணியின் முக்கிய எக்ஸ் வீரராக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் பொருத்தவரை 10 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தாலோ அல்லது இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தாலோ ஆட்டத்தின் சூழ்நிலை அப்படியே மாறும். சர்வதேச தொடர்களில் இந்திய அணிக்கு விளையாடும் போது நிச்சயம் அழுத்தம் கண்டிப்பாக இருக்கும். அதுவும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடும்போது நிச்சயமாக அழுத்தம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு அதிக வாய்ப்புனு யார் சொன்னா.. எனக்கு இப்போ இதை நினைச்சா மட்டும்தான் பயமா இருக்கு- இந்திய கேப்டன் ரோஹித் பேட்டி

ஏனென்றால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாடுவதற்கு தரமான குறைந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அது போன்ற ஒரு தரமான வீரர்தான் ஹர்திக் பாண்டியா. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உலகில் உள்ள அனைத்து தரமான கிரிக்கெட் வீரர்களுக்கும் ஏதோ ஒரு காலம் நிச்சயம் கடினமாக இருக்கும். தொடர்ச்சியாக எந்த வீரராலும் சிறப்பாக விளையாட முடியாது” என்று கம்பீர் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles