இந்திய அணி சரியான நேரத்தில் அதை செஞ்சா மட்டுமே.. டி20 உலக கோப்பையை மறுபடியும் வெல்ல முடியும்.. சவுரவ் கங்குலி எச்சரிக்கை

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த மாதம் முதல் துவங்க உள்ள நிலையில் இந்திய அணி உள்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற உள்ளன. இதில் t20 உலக கோப்பையை வெல்லும் அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முதன்மையான அணிகளாக கருதப்படுகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி அதிக கவனம் பெறக்கூடிய அணியாக உள்ளது.

- Advertisement -

ஏனென்றால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த இரண்டு வருடங்களாக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. 8ம் வரிசை வரைக்கும் பேட்டிங் ஆர்டர், அணியில் இடம் பிடித்துள்ள அனைவரும் அதிரடியான பேட்டிங், சுழலுக்கு வருண் சக்கரவர்த்தி, வேகத்துக்கு பும்ரா என சிறந்த அனைவரும் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும் சரியான நேரத்தில் உச்சகட்ட ஃபார்மை அடைந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலக கோப்பையை வெல்ல முடியும் என்று சௌரவ் கங்குலி கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கங்குலி கூறும் போது “டி20 கிரிக்கெட் பொருத்தவரை இந்திய அணி முதன்மையான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. இப்போது அசைக்க முடியாத அணியாக இந்திய அணி உள்ளது. இருப்பினும் சரியான நேரத்தில் உச்சகட்ட ஃபார்மை அடைந்து சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம். அப்போதுதான் டி20 உலக கோப்பையை வெற்றி பெற முடியும். இப்போது என்னுடைய ஃபேவரிட் அணிகளில் ஒன்று இந்திய அணி” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles