கௌதம் கம்பீர், தலைமை பயிற்சியாளராகி மூன்று மாதங்களே ஆன நிலையில், இந்திய அணியானது நியூசிலாந்து மற்றும் இலங்கை அணியிடம் வரலாறு காணாத தோல்வியை தழுவியது. எந்தப் பயிற்சியாளருக்கும் வழங்காத தேர்வு குழு கூட்டங்களில் தீர்வை எடுக்கும் சிறப்பு சலுகை கௌதம் கம்பீருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் 27 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை அணியிடம் ஒரு நாள் தொடரில் தோல்வி மற்றும் நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் தோல்வி என மிகப் பெரிய தோல்வியே கண்டதால். ஆஸ்திரேலியா தொடருக்கு பின்பு, கம்பீரை ரத்து செய்யலாமா என்று பிபிசிஐ-யை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.
அதிரடி முடிவை எடுக்க தயாராகும் பிபிசிஐ:
கௌதம் கம்பீர், அணி தொடர்பான அனைத்து தீர்மானங்களிலும் தலையிடுதல் மற்றும் டாப் ஆடர்களை மாற்றுதல் போன்ற விஷயங்களில் செயல்பட்டதால் தான் இந்திய அணி, மிக மோசமான தோல்விகளை தழுவ நேரிட்டது என விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, மும்பை டெஸ்ட் தொடரில் டாப் வரிசையில் உள்ள வீரர்கள் சுழல் பந்து கேதுவான ஆடுகளத்தில் சோபிக்க தவறிவிட்டனர்.
மேலும், மும்பையில் நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கானை நம்பர் 8 இல் அனுப்பியது மற்றும் கீழ் வரிசை பேட்டரான பந்து வீச்சாளர் முகமது சிராஜை, நாள் ஆட்டத்தின் முடிவில் அனுப்பியதை குறித்தும் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இம்முடிவைகளை பிபிசிஐ தரிப்பில் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முன்னதாக பணியாற்றிய ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இல்லாத உரிமை கௌதம் கம்பீருக்கு வழங்கப்பட்டது. பிசிசிஐ விதிகள் தேர்வுக் குழுக் கூட்டங்களில் பயிற்சியாளரை ஒரு பகுதியாக அனுமதித்ததில்லை. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் பிறகு தேர்வுக் குழுவில் விவாதம் நடைபெறும்” என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தலைமை பயிற்சியாளர் அதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்” என்றார்.
பிசிசிஐ இப்பொழுது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வெல்ல வேண்டும் மற்றும் பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.

