பாவம் ரிஷப் பண்ட்டை காப்பாத்துங்க.. வன்மத்தில் அவர ஜீரோவாக மாற்றிவிடுவார் போல கம்பீர் – அத்துல் வாசன் வேண்டுகோள்

இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தீர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு விக்கெட் கீப்பர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆவர். இவர்களில் ராகுல் தான் முதல் சாய்ஸ் என கம்பீர் திட்டவட்டமாக கூறிவிட்டார். அவருக்கு மாற்று வீரராகத் தான் பண்ட் அணியில் இடம்பிடிதுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கம்பீருக்கும் பண்ட்க்கும் டெஸ்ட் தொடரிலேயே சரிபட்டு வராமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பண்ட்டின் அதிரடி அணுகுமுறையை கம்பீர் தடுத்துள்ளார். மேலும் இப்போது அணியில் இல்லாமல் இருப்பது, கம்பீர் பண்ட்க்கு வைக்கும் கட்டளைகள் எல்லாம் ரிஷப் பண்ட்டின் வாழ்கையை அழித்துவிடும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அத்துல் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது, ” நடப்பு இந்திய அணியில் யார் விளையாட வேண்டும் என்ற முழு முடிவை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் எடுக்கிறார். எதற்காக ரிஷப் பண்ட்டை அணியை விட்டு வெளியில் அமர வைத்துள்ளார் என எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. இது பெரிய ஏமாற்றம். “

- Advertisement -

” பண்ட் ஓர் அபார வீரர். இந்திய அணிக்காக பல போட்டிகளை தனி ஆளாக அவர் நின்று வென்று கொடுத்துள்ளார். அவரைக் கண்டாலே எதிரணிகள் பயன்படுகின்றன. அவரை ஒதுக்கி இருப்பது சரியல்ல. இதற்காக கே.எல்.ராகுல் நல்ல வீரர் இல்லை என நான் கூற வரவில்லை. ஆனால் ரிஷப் பண்ட் இருக்கும் போது ராகுலிடம் கம்பீர் என்ன கண்டார் ? ” என்றார்.

மேலும், ” இப்படியேப் போனால் அணியில் நாம் விளையாடுவோமா இல்லையா என்ற குழப்பத்தில் ஹீரோவாக இருக்கும் பண்ட்டை ஜீரோவாக மாற்றுவிடுவார் கம்பீர். ” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles