நான் கனவு கண்ட கேப்டன்தான் சூரியகுமார்.. என் வாழ்க்கைய ஈசி ஆக்கிட்டார் – கவுதம் கம்பீர் பேச்சு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவை பாராட்டி பேசியிருக்கிறார். நடப்பு டி20 உலகக் கோப்பையின் இந்திய அணியின் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக கேப்டன் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்திக்க வேண்டியது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது குறித்து கவுதம் கம்பீர் பேசும் பொழுது “இந்த டி20 கிரிக்கெட் வடிவத்தில் என்னுடைய வாழ்க்கையை மிகவும் சுலபமானதாக சூரியகுமார் மாற்றிவிட்டார். அவர் களத்தில் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் அவர் எவ்வளவு திறமையானவர் என்பது இதற்கு காரணம் கிடையாது. அவர் வீரர்களுடன் மைதானத்தில் எப்படி பழகுகிறார், எப்படி பேசுகிறார் என்பது தான் முக்கியம். அவர் சிறந்த வீரர் என்பதை தாண்டிலும் அவர் சிறந்த தலைவராக இருக்கிறார். இதுதான் என்னுடைய வேலையை மிகவும் சுலபமானதாக மாற்றி இருக்கிறது”

- Advertisement -

“சூரியகுமார் யாதவை எடுத்துக் கொண்டால் அவர் மிகச் சிறந்த தலைவராக இருக்கிறார். ஒரு பயிற்சியாளராக அவர் அணி சூழ்நிலையை மிகவும் அமைதியாக வைத்துக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சூரிய குமாருக்கு நல்ல மனம் இருக்கிறது. அவரிடம் எப்போதும் நல்ல நோக்கங்கள் மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியாளரும் இப்படிப்பட்ட கேப்டன்தான் வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட ஒரு கேப்டனாக அவர் கிடைத்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles