அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான திட்டங்கள் சீக்கிரத்தில் ஆரம்பிக்கப்படும் என இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒவ்வொரு உலககோப்பை முடிவடைந்ததும் உடனடியாக அடுத்த உலகக் கோப்பைக்கு திட்டங்களை ஆரம்பித்து செயல்படுத்துவது இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் வாரியத்தில் அணுகுமுறையாக இருந்து வருகிறது. சஞ்சு சாம்சனுக்கு இரண்டாவது விக்கெட் கீப்பராக வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து கம்பீர் பேசும் பொழுது “ஒரு நாள் உலகக் கோப்பைக்கு முன்பாக நமக்கு 25 முதல் 30 போட்டிகள் மட்டுமே உள்ளன. இந்த வடிவத்தில் தற்போது போட்டிகள் அதிகம் நடைபெறுவதில்லை. எனவே எல்லாம் சீக்கிரம் திட்டங்களை உருவாக்கினால் அது நமக்கு நல்லதாக அமையும்”
“தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதற்கு ஈஸியான இடம் கிடையாது. அங்குள்ள சூழ்நிலைக்கு எந்த காம்பினேஷன் சரியாக வரும், எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். இதற்கான மேப் ஐபிஎல் தொடர் முடிவு அடைந்ததும் உருவாக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

