இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களிடம் பேசிய வீடியோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் தன்னுடைய வீரர்கள் எப்படி போட்டியை எதிர்கொள்ள வேண்டும்? என்று கம்பீர் பேசி இருக்கிறார்.
மேலும் இந்த வீடியோவில் பேசியுள்ள கம்பீர் முதலில் ரிங்கு சிங் தன் தந்தை இறந்த போதும் அனைத்து திரும்பி வந்ததற்கு மிகப்பெரிய கேரக்டர் வேண்டும் என கூறியிருக்கிறார். அத்தோடு மொத்த அணியும் ரிங்கு சிங் பின்னால் இருக்கிறது எனவே அவர் தனியாக இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
இந்த வீடியோவில் இந்திய வீரர்களிடம் பேசிய கம்பீர் ” நண்பர்களே அழுத்தம் இருப்பது நிச்சயம் உண்மைதான். ஆனால் அதைக் கண்டு நாம் ஓடி ஒளியாமல் அரவணைக்க வேண்டும். அதை நாம் நேருக்கு நேராக சந்திக்க வேண்டும். போட்டியில் எங்காவது நீங்கள் அழுத்தம் இருப்பதாக நினைத்தால், அடுத்த நொடியே ஒரு பாசிட்டிவான தைரியமான முடிவை எடுங்கள்”
“நீங்கள் இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்ததே இப்படிப்பட்ட ஒரு போட்டியை விளையாடுவதற்குதான். இத்தனை நாளாக பயிற்சி எடுத்து உருவாகி வந்தது உங்களுடைய சொந்த மைதானத்தில் ஒரு நாக் அவுட் போட்டியை விளையாடத்தான். எனவே நீங்கள் தைரியத்துடன் துணிவாக விளையாடுங்கள். அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் பாசிட்டிவ் முடிவை எடுங்கள். நாட்டுக்காகவும் உங்களில் மற்றவருக்காகவும் நீங்கள் விளையாடுவதற்கு மகிழுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

