கேப்டன்சியை விட்டு ஒரு நாள் கூட ஆகல.. தல தோனியை மீண்டும் சீண்டிய கம்பீர்.. ரசிகர்கள் கோபம்

இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு 50ஓவர் உலக கோப்பை என இரண்டு உலக கோப்பைகளை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும்.

- Advertisement -

அந்த உலகக் கோப்பைகளை இன்னும் நினைவு கூறும் வேளையில், அதற்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா என்று இரண்டு கேப்டன்கள் உலகக்கோப்பை எதிர்கொண்ட போதும் இன்னும் ஒரு கோப்பையைக் கூட வாங்க முடியவில்லை. அதன் சோகம் இன்னமும் நீடித்து வருகிறது.

- Advertisement -

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைகளில் இந்திய அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக திகழ்ந்தவர் கௌதம் கம்பீர். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இந்திய அணி கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றி இருக்கிறார். அதிலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டி மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த 91 ரன்கள் காலத்திற்கும் நின்று பெயர் சொல்லும்.

- Advertisement -

அப்படிப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ்களை விளையாடி இருக்கும் கௌதம் கம்பீர் தனது பேட்டிகளில் கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு தனிநபரால் விளையாடக்கூடிய விளையாட்டு அல்ல, தனிநபரால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது ஒரு அணியால் மட்டுமே முடியும். எனவே உலகக்கோப்பையின் வெற்றிக்கு தனிநபரை மட்டுமே அடையாளம் கூறுவது சரி இல்லை.

மேலும் உலகக் கோப்பையை வென்ற அதே அணியில் யுவராஜ் சிங், ஜாகிர் கான் ஆகியோருக்கான உரிய மரியாதை இன்னும் கிடைக்கப் படவில்லை என்றும் மகேந்திர சிங் தோனி மீடியாக்களில் மூலம் தான் பிரபலப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்றும் சர்ச்சையான கருத்துக்களைக் கூறி இருக்கிறார்.

- Advertisement -

2023ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற போது ஓரியோ என்ற பிஸ்கட் விளம்பரத்தில் நடித்த மகேந்திர சிங் தோனி, அதில் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றது போல் 2023ஆம் ஆண்டும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெறும். ஆனால் இந்திய அணியால் 2023ஆம் ஆண்டில் பத்து போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடையும்.

எனவே இந்த உலகக் கோப்பை தோல்வியை ஓரியோ பிஸ்கட் நிறுவன விளம்பரத்தோடு தொடர்பு படுத்தி தோனியை மறைமுகமாகச் சாடி இருக்கிறார். கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில்
“உலகக்கோப்பையில் விளையாடி வெற்றி பெற்று இருப்பதால் அதன் அழுத்தமும், மகிழ்ச்சியும் எனக்கு தெரியும். உலகக்கோப்பையை வென்றதால் 140 கோடி மக்கள் நிம்மதியாக மூச்சு விடுகிறார்கள். எனவே உலக கோப்பையை வெல்வது தான் முக்கியம். தோழர்களே எந்த திருப்பத்தையும் இனி கொண்டு வர வேண்டாம். விளம்பரத்தை இயக்க விடாதீர்கள். சிறுவர்களை விளையாட விடுங்கள் என்று கூறியிருக்கிறார். நேற்றுதான் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கேவின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கூறி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதற்குள் கௌதம் கம்பீர் மீண்டும் தோனியை சாடுகிறார் என்று ரசிகர்கள் கொதிப்படைந்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles