உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. ரோகித் விராட்டை நான் வெளியே அனுப்பினேனா?.. இதான் நடந்தது – கம்பீர் பதில்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தான் விராட் கோலி ரோஹித் சர்மா விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு நட்சத்திர வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென ஓய்வு பெறுவதற்கு பின்னணியில் கம்பீர் இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவர்கள் விளையாடுவதை கம்பீர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் பேசும்போது “நானும் மனிதன்தான். கடந்த 18 மாதத்தில் நானும் ஏதாவது தவறுகள் செய்திருப்பேன். ஆனால் அந்த தவறுகள் நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்டதாகத்தான் இருக்கும். தவறுகள் தவறான நோக்கத்திற்குதான் செய்யப்படக்கூடாது”

- Advertisement -

“நான் என் அணியில் உள்ள எல்லா வீரர்களிடமும் நேர்மையாக இருக்கிறேன். நான் அவர்களுடைய கண்ணை பார்த்து பேசும் அளவுக்கு நேர்மையாக இருக்கிறேன். இதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஆனால் மீடியாக்களில் வரக்கூடிய செய்திகளுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles