சூப்பர் ஸ்டார்களை உருவாக்குவது என்னோட வேலை கிடையாது.. நான் இந்த மாதிரி ஒன்னதான் உருவாக்குவேன் – கம்பீர் அதிரடி கருத்து

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தான் சூப்பர் ஸ்டார்களை உருவாக்க முடியாது எனவும், சூப்பர் அணியை முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பொறுப்பில் இருக்கும் பொழுதும் அதையே கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து கம்பீர் பேசும் பொழுது “இந்திய ஊடகங்கள் எப்பொழுதும் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்க முயற்சி செய்கின்றன. ஆனால் ஒரு பயிற்சியாளராக நான் ஒரு சூப்பர் அணியைதான் உருவாக்க வேண்டும். என்னுடைய வீரர்கள் 15 பேரும் எனக்கு சமமானவர்கள். அவர்களில் நான் எப்பொழுதும் வித்தியாசம் பார்க்க மாட்டேன்”

- Advertisement -

“மேலும் ஒரு வீரரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்றுதான் நான் பார்ப்பேன். அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? அவர் ஊடகத்தில் எவ்வளவு டிஆர்பி ரேட்டிங்கை உருவாக்குகிறார்? என்றெல்லாம் பார்க்க மாட்டேன். அடுத்து என் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக நான் ஒரு சூப்பர் அணியை உருவாக்குவேன் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles