WPL 2024.. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?. மொத்தம் எத்தனை விருதுகள்?. முழு விவரம்

பெண்கள் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

- Advertisement -

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கத்தில் பெங்களூர் அணியின் பந்து வீச்சைப் பதம் பார்த்த டெல்லி அணி, பவர் பிளேவிற்கு பிறகு பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி அணியினைப் பதம் பார்த்தனர். ஒரு கட்டத்தில் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் என்ற நிலையில் இருந்த டெல்லி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் மந்தனா (31), டிவைன் (32), எல்லிஸ் பெர்ரி (35) ஆகியோரின் உதவியுடன் 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டியது. இதன் மூலம் 16 ஆண்டு கால ஏக்கத்தை தனித்து சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூர் அணி. 16 ஆண்டு காலமாக ஆண்கள் அணி செய்ய முடியாத சாதனையை பெண்கள் அணி செய்து ஜெயித்துக் காட்டியுள்ளது.

- Advertisement -

இதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூர் அணிக்கு, பரிசுத்தொகையாக 6 கோடி வழங்கப்பட்டது. இறுதிப் போட்டிகளில் தோற்ற டெல்லி அணிக்கு பரிசுத்தொகையாக மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி 341 ரன்கள் குவித்த ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரிக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது.

இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆர்சிபி வீராங்கனை ஸ்ரேயா பாட்டிலுக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த சீசனில் மோஸ்ட் வேல்யூபில் பிளேயர் விருதினை வென்ற குஜராத் ஜெயின்ஸ் அணியின் தீப்தி சர்மாவுக்கு 5 லட்ச ரூபாய், வளர்ந்து வரும் வீராங்கனை விருதை வென்ற ஸ்ரேயா பாட்டீலுக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கபட்டது.

- Advertisement -

பவர்ஃபுல் ஸ்ட்ரைக்கர் ஆப் தி சீசன் ஜார்ஜியா வர்ஹேமுக்கு ஐந்து லட்ச ரூபாய், அதிக சிக்சர்கள் அடித்த டெல்லி அணியின் செபாலி வர்மாவுக்கு 5 லட்சம் ரூபாய், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகி விருது பெற்ற பெங்களூர் அணியின் மோலினக்ஸ்க்கு ஐந்து லட்ச ரூபாய், பவர்ஃபுல் ஸ்ட்ரைக்கர் ஆப் த பைனல் விருது வென்ற டெல்லி அணியின் செபாலி வர்மாவுக்கு 5 லட்சம் ரூபாய் என்று மொத்தம் பத்து விருதுகள் இந்த சீசனில் கொடுக்கப்பட்டது.

இந்த விருதுகளில் பெரும்பாலான விருதுகள் ஆர்சிபி அணி வீராங்கனைகளே வாங்கியுள்ளனர். அந்த அளவிற்கு இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பங்களிப்பினை வழங்கியுள்ளனர். எனவே டைட்டிலை வென்று அசத்தியுள்ள ஆர்சிபி அணிக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் வருகிறது. பெண்கள் அணியை போன்று ஆண்கள் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles